Sleep Tight Meaning in Tamil Language
Sleep Tight (ஸ்லீப் டைட்) என்ற வாக்கியத்தை நீங்கள் அதிகமாக பார்த்திருப்பீர்கள். அந்த வாக்கியத்திற்கு இது வரை நீங்கள் என்ன அர்த்தம் புரிந்து கொண்டு இருக்குறீர்கள் அது உண்மையானதா என்ற சந்தேகம் உங்கள் மனதில் உள்ளதா? இந்த போஸ்ட் இல் நீங்கள் அதற்கான விடையை கண்டிப்பாக தெரிந்துகொள்வீர்கள்.
Sleep (தூக்கம்) என்பது ஓய்வு நிலையை குறிக்கும், அப்பொழுது நம் கண்கள் மூடி இருக்கும், உடல் அதிக அசைவின்றி, மூளை எதையும் சிந்திக்காமல் இருக்கும். ஆனால் இந்த Sleep tight (ஸ்லீப் டைட்) என்றால் என்ன?
Sleep tight (ஸ்லீப் டைட்)

Photo by Isabella and Zsa Fischer on Unsplash
இந்த வாக்கியத்தை நீங்கள் அனைவரும் பயன்படுத்தி இருப்பிர்கள். இதன் உண்மையான அர்த்தம் நம்மில் பலரும் அறியாதது. முற்காலத்தில் இதன் பொருள் வேறு. ஆனால் தற்பொழுது அதிகமாக பயன்படுத்தப்படும் இதன் பொருள்
Sleep tight (ஸ்லீப் டைட்) என்பது ஒரு நல்ல, இடையூறற்ற, ஒழுங்கான, ஆழ்ந்த உறக்கத்தை குறிக்கிறது.
Sleep tight (ஸ்லீப் டைட்) பற்றிய கட்டுக்கதை
- முற்காலத்தில் வைக்கோல் மேல் கோணி போட்டு அவை அசையாமல் இருக்க சிறிய கயிறுகளால் இறுக்கமாக கட்டப்பட்ட கட்டில்களையே பயன்படுத்தினார்கள். அக்கட்டில்கள் படுக்க மிக வசதியாக இருக்க அந்த கயிறுகள் மிகவும் இறுக்கமாக இருக்க வேண்டும் அதுக்காக பயன்படுத்த பட்ட வாக்கியமே இது.
- மற்றொரு கட்டுக்கதை என்னவென்றால் sleep tight என்பது போர்வை சிறிதும் விலகாத ஆழ்ந்த உறக்கத்தை குறிக்கும். மிகவும் ஆழ்ந்து தூங்கும் பொழுது நாம் போர்த்தி இருக்கும் போர்வை சிறிதும் விலகாமல் இருக்கும். அதிகம் விலகிய போர்வை ஓய்வற்ற தூக்கத்தை குறிக்கிறது.
- sleep tight என்பது மிகவும் கனமான போர்வையை போர்த்தி உறங்குவதை குறிக்கலாம். ஏன்னென்றால் கனமான போர்வை நம் பலருக்கு, ஆரோக்கியமான தூக்க பழக்கத்தின் பகுதியாக மாறிவிட்டன. மன இறுக்கம் மற்றும் தூக்கமின்மை உள்ளவர்களுக்கு இது பயனளிக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மாறாக மெல்லிய போர்வை நம் நரம்பு மண்டலத்தை எழுப்பும். இதனால் தூக்கம் சரியாக வராது. கனமான போர்வையை போற்றி கொள்வதையே அந்த sleep tight வாக்கியம் குறிப்பதாக சிலர் நினைக்கின்றனர்.
- மற்றுமொரு கட்டுக்கதை, அது ஒரு குழந்தை பாடல். Good night sleep tight don’t let the bedbugs bite!!!! rhyme அதற்கேற்ப நம் போர்வையை இறுக்கமாக போற்றி கொண்டால் பூச்சி கடியில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்றும் அதையே அந்த sleep tight வாக்கியம் குறிப்பதாகவும் நினைக்கின்றனர்.
இந்த நான்கு கட்டுக்கதைகளிலும் பொதுவாக உள்ளது ஒன்றே அது இடையூறு இல்லாத ஆழ்ந்த உறக்கம். அந்த உறக்கத்தை பெற நாம் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள் பின் வருமாறு
இடையூறு இல்லாத ஆழ்ந்த உறக்கம் பெற
நல்ல சுற்று சூழல்
அதிகமான ஓலி மற்றும் ஒளி இல்லாத அதாவது அமைதியான, அதிக வெளிச்சம் இல்லாத சூழ்நிலையே தூக்கத்திற்கு ஏதுவானது. இது அனைவரும் அறிந்ததே. மேலும் நல்ல தட்பவெப்ப நிலையை உங்கள் படுக்கை அறையில் ஏற்படுத்துங்கள். அதிகமான குளிரோ அல்லது அதிகமான வெயிலோ தூக்கத்திற்கு எதிரி .
தொழில்ட்பங்கள்
இவை நம் தூக்கமின்மைக்கு நம்மையே காரணமாக்கும் ஒன்று. தூங்குவதற்கு 1 மணி நேரம் முன்பே தொலைக்காட்சி, கணினி, கைபேசி இவை அனைத்தும் off செய்து விட்டு படுத்தல் நம் தூக்கமின்மை பிரச்சனையைப் படிப்படியாக குறைக்கும்.
உணவு
உணவு தூக்கம் இவ்விரண்டிற்கும் அதிக தொர்பு உண்டு.அதிகமான உணவும் தூக்கத்தை பாதிக்கும் அதே போல் குறைவான உணவும் தூக்கத்தை பாதிக்கும். இரவு உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது மிக முக்கியம். தாமதமாக எடுத்துக்கொள்ளும் இரவு உணவு உறக்கத்தை அதிக அளவு பாதிக்கும்.
ஆல்கஹால் மற்றும் காஃபின்
இவை இரண்டையும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் தவிர்த்தல் மிக அவசியம். இரண்டுமே நம் தூக்கத்தை அதிக அளவு பாதிக்கும். ஆல்கஹால் உடனடி உறக்கத்தை தந்தாலும் சிறிது நேரத்தில் அதன் தன்மை நீங்கியவுடன் தூக்கத்தை கெடுக்கும்.
உங்கள் ஆழ்ந்த தூக்கத்தின் அளவை காஃபின் குறைக்கும்.
ஒரு ஆய்வில், படுக்கைக்கு 6 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உட்கொள்வது மொத்த தூக்க நேரத்தில் 1 மணிநேரம் குறைத்தது என தெரியவந்தது.
சரியான தூக்க நேர காலஅளவு மற்றும் திசை
தேசிய தூக்க அறக்கட்டளையின் தூக்க நேர கால பரிந்துரைகள்
பள்ளி வயது குழந்தைகளுக்கு 9 முதல் 11 மணி நேர,
இளைஞர்களுக்கு 8 முதல் 10 மணி நேர,
பெரியவர்களுக்கு 7 முதல் 9 மணி நேர,
வயதானவர்களுக்கு 7 முதல் 8 மணி நேர தூக்கமும் பொருத்தமானதாகக் கருதப்பட்டது.
கிழக்கு மற்றும் தெற்கு திசைகள் தூங்குவதற்கு மிகவும் சிறந்த திசைகள். தெற்கே உங்கள் தலையுடன் தூங்குவது வடக்கு திசையின் எதிர்மறையான விளைவுகளை மாற்றியமைக்கிறது, இதனால் பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
பகல் நேர உறக்கம்
பகல் நேர உறக்கம் உங்கள் இரவு நேர உறக்கத்தை பாதிக்காத வண்ணம் இருத்தல் மிக அவசியம். அதற்கு உங்கள் நினைவில் இருக்க வேண்டியவை
- அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
- 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை தூங்கலாம்.
- உங்கள் பகல் நேர தூக்கத்தை தாமதமாக தொடங்க வேண்டாம்.
இத்தகைய குறுகிய நேர தூக்கம் உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும். அதோடு உங்கள் மன அழுத்தத்தைப் போக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
மன அழுத்தம் இல்லாத நிலை
உங்கள் மன அழுத்தம் உங்களை சில நேரங்களில் நிம்மதியாக தூங்க விடாது. அத்தகைய நேரங்களில் நீங்கள் அவற்றை குறைக்கும் வழியில் ஈடுபட வேண்டும். அதற்கு உங்களுக்கு பிடித்தமான ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஐ நீங்கள் தேர்வு செய்யலாம். தூக்கமும் மிக சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
உடல் செயல்பாடு
இது மிக முக்கியமான ஒன்று. தங்கள் பணிகளிலில் ஓரளவு உடற் செயல்பாடு இருக்கும் நபர்கள் தூங்குவதில் கஷ்டப்படுவதில்லை. உங்கள் அன்றாட வாழ்வில் உடற் செயல்பாடு அதிகம் இல்லாத நபர்கள், உங்கள் தினப்பழக்கமாக சில உடற் பயிற்சியைச் சேர்க்க வேண்டும். இதனால் உங்கள் உடல் வலிமை அதிகரிக்கும் தூக்கமும் sleep well நன்றாக வரும்.
சுத்தமான நல்ல படுக்கை மற்றும் விரிப்பு
நீங்கள் உறங்கும் முன் உங்கள் படுக்கை மற்றும் விரிப்பு சுத்தம் செய்தல் மிகவும் முக்கியமானது. ஒரு ஆய்வின் முடிவில்
நல்ல படுக்கை மற்றும் விரிப்பு உங்கள் தூக்கத்தை மிகுதி படுத்துகிறது என்று தெரிய வந்துள்ளது.
Read this article in English Language
<\body>
Pingback: How to sleep well and fast - Love Yourself
Pingback: 21 Best Beauty Tips in Tamil | Best self-care practices for healthy skin - Love Yourself