21 Best Beauty Tips in Tamil
அழகு பெண்களுக்கு மட்டும் இல்லாமல் பல ஆண்களுக்கும் தேவைப்படும் ஒரு விஷயமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் ஆள்பாதி ஆடைபாதி என்ற பழமொழி எந்த அளவுக்கு முக்கியமா அதே அளவுக்கு அழகும் தோற்றமும் மிக முக்கியம். ஆனால் இந்த காலகட்டத்தில் அழகோட வரையறை (The definition of beauty) ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் அடங்கவில்லை. குறிப்பாக வெள்ளையாக இருந்தால் தான் அழகு ஒல்லியாக இருப்பவர்கள் தான் அழகு இக்கட்டுகள் இப்போது தகர்ந்து விட்டது. முற்றிலும் தகர்ந்து விட்டது என்று சொல்லலாம்.
நம் உடல்வாகிற்கு உடல் நிறத்திற்கு ஏற்றவாறு நம்மை நாம் அழகுப்படுத்திக் கொள்ளலாம். இதுவே இன்றைய காலகட்டத்தின் அசாத்திய உண்மை. நமக்கு தன்னம்பிக்கையையும் செல்ஃப் லவ் எனப்படும் சுய அன்பையும் தரும் அழகை நாம் எவ்வாறு அடையலாம் என இப்பதிவில் பார்க்கலாம்.

Photo by Audrey Fretz on Unsplash
Unavoidable Organic Beauty tips and ideas At home
1. அதிக கெமிக்கல் பயன்படுத்தாத சோப்பை பயன்படுத்துங்கள். குறிப்பாக ரோஸ்வாட்டர், பீட்ரூட் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் ஆர்கானிக் சோப்பு (organic beauty soap)களை பயன்படுத்துதல் நல்லது.
2. உங்கள் குளிர்சாதன பெட்டியில் உள்ள ஐஸ் கியூப் பாத்திரத்தில் தக்காளி அல்லது உருளைக்கிழங்கு சாறு ஊற்றி freeze செய்ய வேண்டும். அவற்றை ஐஸ் க்யூப் ஆக மாற்றி முகத்தில் மசாஜ் (fase massage with tomato/potato ice cube) செய்து வர முகம் பொலிவு பெரும்.
3. ஃபேஸ் யோகா Face yoga உங்கள் முகம் பொலிவு பெறவும் டபுள் சின் ஆன்டி-ஏஜிங் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடவும் உங்களுக்கு உதவும்.
4. stress மன அழுத்தம் உங்களின் உள் அழகையும் வெளி அழகையும் ஒருசேர கெடுக்கும். இளமையான சருமம் பெற நீங்கள் உங்கள் மன அழுத்தத்தை நல்ல முறையில் கட்டுப்படுத்த வேண்டும்.
5. வைட்டமின் E கேப்ஸ்யூல் வைட்டமின் E ஆயில் இவற்றை இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் முகத்தில் தடவினால் முகம் பொலிவுபெரும்.
6. சுத்தமான நல்ல ஆலிவ் ஆயிலை (pure olive oil massage) முகத்தில் மசாஜ் செய்துவர முகப்பொலிவு பெறும்.
7. கணினி மற்றும் தொலைபேசி அதிக நேரம் பயன்படுத்துவதால் நம் கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கணினி மற்றும் தொலைபேசி பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
8. நீங்கள் வெளியே சென்று வீடு திரும்பும்போது உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளை ரோஸ் வாட்டர் கொண்டு சுத்தம் செய்யலாம். அது உங்கள் முகத்தை சுத்தம் செய்யும். அது மட்டுமல்லாமல் நல்ல பொலிவைத் தரும்.
10. வைட்டமின் E மற்றும் வைட்டமின் Cஅதிகம் உள்ள பழம் மற்றும் காய்கறி உணவுகளை உட்கொள்ளுதல் நம் முகத்தை மேலும் அழகாக்கும் பொலிவு தரும்.
11. நீங்களே உங்கள் முகத்திற்கு பேசியல் மசாஜ் செய்து கொள்ளுதல் அவசியம்.
12. மிக முக்கியமாக புகைப்பிடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்த்தல் உங்களுக்கு இளமையான நல்ல சருமத்தை அளிக்கும்
13. உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற டெட் செல் நீக்குவதற்கு நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள உப்பு, சர்க்கரை அல்லது காபி பவுடருடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் கலந்து உங்கள் கையின் நுனிகளால் நன்கு உங்கள் முகத்தை மசாஜ் செய்து அவற்றை நீக்கலாம். உங்கள் முகத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் பொலிவு தரும்.
14. நல்ல ஆழ்ந்த உறக்கம் உங்கள் முகப்பொலிவிற்கு முக்கிய பங்களிக்கும். குறைந்தது 8 மணி நேரமாவது நன்கு உறங்க வேண்டும்.
15. அதிக கெமிக்கல் உள்ள அழகுப் பொருட்களை பயன்படுத்துதல் உங்கள் அழகை அதிக அளவில் பாதிக்கும். மாறாக ஆர்கானிக் பொருட்களை தேர்வு செய்யுங்கள்.
16. வைட்டமின் C சீரம் பயன்படுத்த உங்கள் முகம் பொலிவு பெறும். நீங்கள் வீட்டிலேயே ஆரஞ்சு பழத் தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அவற்றை விட்டமின் சி சிரமமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
17. வீட்டிலேயே ஃபேஸ் பேக் (face pack) தயார் செய்யுங்கள். அவற்றை வாரத்திற்கு இரு முறை ஆவது பயன்படுத்துங்கள். உங்கள் ஃபேஸ் பேக்கில் பால், தயிர், ரோஸ் வாட்டர், தக்காளி, உருளைக்கிழங்கு, ஆலிவேரா, மஞ்சள், சந்தனம் இவைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்த மறக்காதீர்கள்.
18. தேவையான அளவு நீர் அருந்துதல் முகப்பொலிவு பெற முக்கியமான ஒன்று.
போதுமான தினசரி திரவ உட்கொள்ளல்:
- ஆண் – 15.5 கப் (3.7 லிட்டர்) ஒரு நாளை
- பெண் – 11.5 கப் (2.7 லிட்டர்) ஒரு நாளை
19. வெள்ளரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு இவற்றில் ஏதேனும் ஒன்றை சிறு வட்ட துண்டுகளாக வெட்டி அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்து பின் கண்களுக்கு மேல் வைத்து 15 நிமிடம் கழித்து அவற்றை எடுத்தால் கண்களுக்கு அடியிலுள்ள கருவளையம் குறையும்.
20. சரியான அளவு உறக்கமும் நல்ல உணவுப்பழக்கமும் நல்ல வாழ்க்கை முறையும் பொசிட்டிவ் திங்கிங் உம் நம்மை மேலும் அழகாக்கும்.
21. Self-Love முக்கியமான ஒன்று. நீங்கள் உங்களை முழுமையாக நேசித்தல் மட்டுமே மேலே உள்ளவைகளை உங்களால் செய்ய இயலும். அவற்றிற்கு உங்களது நேரத்தை உங்களால் ஒதுக்க இயலும்.
அழகு என்பது ஒரு பயிற்சி.அதை செய்ய தொடங்குங்கள்.
ஏனென்றால் இதைப் பெற நீங்கள் அதிகம் தகுதியானவர்.
நீங்கள் மனதளவிலும் உங்கள் தோற்றத்திலும் மேலும் மேலும் அழகை சேர்க்க வாழ்த்துக்கள்.